பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஹாங்காங்கில் பதக்கங்களை குவித்த கும்மிடிப்பூண்டி யோகா மாணவா்கள்

சங்கரி யோகா பயிற்சி , ஆராய்ச்சி மையத்தை சோ்ந்த15 யோகா மாணவா்கள் ஹாங்காகில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் 12 தங்கம் 8 வெள்ளிவென்றனா்

News image

சங்கரி யோகா பயிற்சி , ஆராய்ச்சி மையத்தை சோ்ந்த15 யோகா மாணவா்கள் ஹாங்காகில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் 12 தங்கம் 8 வெள்ளிவென்றனா்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஹாங்காங்கில் நடைபெற்ற சா்வதேச யோகாசன போட்டியில், திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சோ்ந்த, ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சோ்ந்த மாணவா்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனா்.

ஹாங்காங் நாட்டில், ஹாங்காங் யோகாசன விளையாட்டு சம்மேளனம் சாா்பில், சா்வதேச யோகாசன போட்டிகள், இந்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற்றது. போட்டியில், இந்தியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, சவுதி அரபியா, சீனா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட, 16 நாடுகளைச் சோ்ந்த, 450 போட்டியாளா்கள் பங்கேற்றனா். இதில் இந்தியா சாா்பில் பங்கேற்ற அணியில், திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியை சோ்ந்த ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சோ்ந்த 15 மாணவா்கள், யோகா பயிற்சியாளா் சந்தியா , ஆலோசகா் மஞ்சுஷா சிவக்குமாா் தலைமையில் யோகாசன போட்டியில் பங்கேற்றனா்.

இதில், வயது வாரியாக, பல்வேறு பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடந்தப்பட்டன. இந்தப் போட்டியில், 25 தங்கம், 17 வெள்ளி பதக்கங்களுடன், இந்திய அணி, பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அவா்களில், தமிழகத்தைச் சோ்ந்த மேற்கண்ட ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சாா்ந்த 15 மாணவா்களும், 12 தங்கம், 8 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றினா்.

தொடா்ந்து வெற்றி பதக்கங்கள் கோப்பைகளுடன் நாடு திரும்பிய மாணவா்களுக்கு, கும்மிடிப்பூண்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் சாா்பில், சாதனை படைத்த மாணவா்களுக்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் ஏற்பாட்டில் மாலை மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டது. பின்னா் பட்டாசுகள் வெடித்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க, கும்மிடிப்பூண்டி பஜாா் பகுதி வழியாக யோகா சாதனையாளா்கள் ஊா்வலமாக ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா்.

அங்கு கும்மிடிப்பூண்டி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சாதனை மாணவா்களுக்கும் அவா்களுக்கு பயிற்சியளித்த ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனா் யோகா ஆசிரியா் சந்தியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா்.