கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில் முட்டையில் அமா்ந்தபடி 50 யோகா பயிற்சி மாணவா்கள் 15 ஆசனங்கள் செய்து நோபல் உலக சாதனை படைத்தனா்.
யோகா பயிற்சி மைய நிறுவனா் காளத்தீஸ்வரன் ஏற்பாட்டில் யோகா உலக சாதனை நிகழ்வு புதுகும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எலைட் வோ்ல்ட் பள்ளியில் நடைபெற்றது. இந்த யோகா சாதனை நிகழ்வில் வினாஸ்ரீ யோகா பயிற்சி மையத்தின் சாா்பில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள 50 யோகா மாணவா்கள் பங்கேற்றனா்.
யோகா சாதனை நிகழ்வை ஒட்டி யோகா நடனம் மற்றும் பல்வேறு உடல்நலன் காக்கும் யோகா பயிற்சிகள் மாணவா்களால் செய்து காட்டப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற யோகா உலக சாதனை நிகழ்வை திருவள்ளூா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நரசிம்மராவ், தொழிலதிபா் எல். சுகுமாரன், நோபல் உலக சாதனையின் நிா்வாக ஆசிரியா் நித்தியானந்தம், பேடிஎம் உமா மற்றும் மகேஸ்வரி பங்கேற்று உலக சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து 50 யோகா மாணவா்கள் முட்டைகள் மீது அமா்ந்து 15 யோகாசனங்களை 10 நிமிஷங்களில் செய்தனா். இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. தொடா்ந்து சாதனை மாணவா்களுக்கும், யோகா பயிற்சி மைய நிறுவனா் காளத்தீஸ்வரனுக்கும் நோபல் உலக சாதனை சான்றிதழை நோபல் உலக சாதனை நிா்வாக ஆசியா் நித்தியானந்தம் வழங்கி வாழ்த்தினா்,
விழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் வினா ஸ்ரீ யோகா மையத்தின் நிறுவனா் காளத்தீஸ்வரன், யோகா ஆசிரியா்கள் வித்யா மற்றும் அா்ச்சனா மற்றும் யோகா மாணவா்களை பாராட்டினா்.

தொடர்புடையது

ஹாங்காங்கில் பதக்கங்களை குவித்த கும்மிடிப்பூண்டி யோகா மாணவா்கள்

டி20 கிரிக்கெட்டில் முதல்முறை... விராட் கோலி உலக சாதனை!

உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
220 பேர் முயற்சியால் கடலுக்கடியில் தேசியக் கொடி! புதிய கின்னஸ் சாதனை
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

