டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

220 பேர் முயற்சியால் கடலுக்கடியில் தேசியக் கொடி! புதிய கின்னஸ் சாதனை

அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடற்கரையில் நீருக்கடியில் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை

Andaman unfurls world’s largest underwater flag

கடலுக்கடியில் தேசியக் கொடி - PTI

Published On :

அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடற்கரையின் நீருக்கடியில் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

அந்தமான் - நிகோபார் தீவுகளின் சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து பறைசாற்றும்வகையில், ஸ்வராஜ் தீவிலுள்ள ராதாநகர் கடற்கரையில் கின்னச் உலக சாதனை படைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, அந்தமான் - நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் ஜோஷி தலைமையில், இந்திய கடற்படை, கடலோர காவற்படை, வனத்துறை உள்பட பல்வேறு அரசுத்துறையினர் மற்றும் ஸ்கூபா பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் என 220-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 197 அடி நீளமும் 131 அடி அகலமும் கொண்ட இந்திய தேசியக் கொடியை நீருக்கடியில் விரித்து, புதிய சாதனை படைத்தனர்.

நீருக்கடியில் தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை

நீருக்கடியில் தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை - PTI

இந்தச் சாதனையை முறைப்படி அங்கீகரித்து, கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நடுவர் ரிஷிநாத், அந்தமான் - நிகோபார் நிர்வாகத்திடம் சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.

Summary

Andaman unfurls world’s largest underwater flag

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.