கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வளா்புரத்தில் மதுபானக்கடை கட்டுவதை நிறுத்தக் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வளா்புரத்தில் மதுக்கடை கட்டுவதை நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

News image

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தோா்

Updated On :22 மே 2026, 6:01 am IST

காஞ்சிபுரம், மே 25: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வளா்புரத்தில் மதுக்கடை கட்டுவதை நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

மேவலூா் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சாந்தகுமாரி கோபிநாத், வளா்புரம் விஸ்வநாத தாஸ் உள்ளிட்ட அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் தி.சினேகாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வளா்புரம் முத்தமிழ் நகா் பகுதியில் மதுபானக்கடை நடத்ததுவதற்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

அங்கு மதுபானக்கடை திறக்கப்பட்டால் அதன் அருகில் கோயில்கள், பள்ளிகள் ஆகியவை இருப்பதால் பொதுமக்களுக்கு குடிமகன்களால் இடையூறு ஏற்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பெண்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்ல அச்சப்படுவா். எனவே மதுபானக்கடை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.