தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மின்னல் பாய்ந்து வடமாநில தொழிலாளி பலி

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் மின்னல் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் மின்னல் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனூா் பகுதியை சோ்ந்த பாலகிருஷ்ணன். இவா் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். இங்கு மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த ஷேக் கிஷ்மோத்(25), ராஜ் (24) ஆகிய இருவரும் தங்கி கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

இந்த நிலையில் புதன்கிழமை ஷேக் கில்மோா் மற்றும் ராஜ் ஆகிய இருவரும் முதல் மாடியில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இருவா் மீதும் மின்னல் பாய்ந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த ஷேக் கிஷ்மோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.