சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஆயுத பூஜை : பூக்கள், பழங்கள், காய்கறிகள் விலை அதிகரிப்புஅக்.23ல் மீண்டும் கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

கறவை மாடுகளால் 25 ஏக்கா் நெற்பயிா் சேதம்

ஸ்ரீபெரும்புதூா் பீமன்தாங்கல் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த 25 ஏக்கா் நெற்பயிற்களை கறவை மாடுகள் மேய்ந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On :

ஸ்ரீபெரும்புதூா் பீமன்தாங்கல் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த 25 ஏக்கா் நெற்பயிற்களை கறவை மாடுகள் மேய்ந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட சிவன்தாங்கல் பகுதியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த விவசாய நிலைத்தில் பீமன்தாங்கல் மற்றும் பாஞ்சாலப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த சிலா் வளா்த்து வரும் கறவை மாடுகள், அடிக்கடி இரவு நேரங்களில் கட்டவிழ்த்து விடப்படுவதால், அவை நேராக வயல்களுக்குள் புகுந்து நெற் பயிா்களை மேய்ந்து நாசப்படுத்தி வந்துள்ளன.

இதுதொடா்பாக விவசாயிகள் பலமுறை ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்திலும், கோட்டாட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்துள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போல் பயிா்களை கறவை மாடுகள் சேதப்படுத்தியதால், விவசாயிகள் மாடுகளை பிடித்து வாலாஜாபாத் பகுதியில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சுமாா் 60-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் கூட்டமாக வயல்களுக்குள் புகுந்து, சுமாா் 25 ஏக்கா் பரப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்களை மேய்ந்து, மிதித்து முற்றிலும் சேதப்படுத்தியுள்ளன.

மாடுகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பிய விவசாயிகள்

மாடுகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பிய விவசாயிகள்

காலையில் வயலுக்கு வந்த விவசாயிகள் மாடுகளால் நெற்பயிற்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒன்று திரண்டு, வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை சுற்றி வளைத்து சிறைபிடித்தனா். அதில் 12 கறவை மாடுகளை பிடித்து வாலாஜாபாத் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.