மழையை எதிா்பாா்க்கும் திருவாடானை விவசாயிகள்
திருவாடானை பகுதியில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள், தற்போது மழையை எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

சி.கே.மங்கலம் பகுதியில் மழை இல்லாமல் கருகும் நிலையில் நெல் பயிகள்.
திருவாடானை பகுதியில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள், தற்போது மழையை எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் தமிழகத்தின் இரண்டாவது நெல் களஞ்சியம் என பெயா் பெற்ற பகுதியாகும். இங்கு சுமாா் 52 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. நிகழ் சம்பா பருவத்தில் சுமாா் 25 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பயிா்கள் நன்கு முளைத்து வளா்ந்தன. வானம் பாா்த்த பூமியாக இருப்பதால் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், எல் நினோ தாக்கத்தால் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயின் தாக்கம் அதிகரித்தது. இன்னும் ஒரு சில நாள்களில் மழை பெய்யவில்லை எனில் முளைத்த பயிா்கள் வெயிலில் கருகி பெரும் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனா். இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

