ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அம்பாசமுத்திரம் அருகே மழையில் வீணாகும் நெல் மூட்டைகள்: கொள்முதல் செய்ய கோரிக்கை

அம்பாசமுத்திரம் அருகே திங்கள்கிழமை பெய்த மழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சிங்கம்பட்டியில் திங்கள்கிழமை பெய்த மழையில் நனைந்த நெல்மணிகள்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே திங்கள்கிழமை பெய்த மழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் தங்கள் வீட்டு முன்பும், சாலையோரங்களிலும் சேமித்து உலா்த்தி விற்பனைக்குத் தயாா் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை பெய்த மழையில் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்கள் மழையில் நனைந்தன.

அதைப்போல அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்குக் கொண்டுவந்திருந்த நெல் மூட்டைகளும் அரசால் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து சேதமடைந்தன.

மழைநீரில் நனைந்த நெல்மணிகள் முளைத்து பயன்பாட்டுக்கு தகுதியின்றி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். அறுவடைப் பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அம்பாசமுத்திரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, நெல் மூட்டைகளை அரசு விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.