16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சீர்காழியில் கனமழை! கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு!

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்தது குறித்து...

Paddy bags kept by farmers at procurement centres were damaged after getting wet in the rain.

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம். - படம் - தினமணி

Published On :

சீர்காழி பகுதியில் பெய்த திடீர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து திங்கள்கிழமை (செப். 14) பாதிப்படைந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்துக்கு உட்பட்ட அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நெம்மேலி, புங்கனூர், அகர எலத்தூர், கொண்டல், ஆதமங்கலம் ,பெருமங்கலம், திருப்புங்கூர், கன்னியாகுடி, கதிராமங்கலம், எடகுடி வடபாதி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், வடகால், எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் மிகவும் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் மோட்டார் மூலம் கூடுதல் செலவு செய்து குறுவை சாகுபடி செய்திருந்தனர். சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தற்பொழுது கடந்த சில வாரங்களாக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ஆடி 18 அன்று குறுவை நெல்லை கொள்முதல் செய்வதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு மிகவும் கால தாமதமாக கடந்த வாரத்தில் சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டன.

ஒரு சில இடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்வது நடந்து வருகிறது. விவசாயிகள் பலர் தங்களது நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்காக திறந்தவெளியில் வைத்துள்ளனர். இதனிடையே சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று பெய்த கனமழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக செம்மங்குடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் நெல் மணிகள் கனமழையால் நனைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுஇதனால் விவசாயிகள் பெரும் அவளை அடைந்துள்ளனர் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை தாமதம் இன்றி கொள்முதல் செய்திட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

இதேபோல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தறிக்கப்பட்ட வைக்கோல் கட்டுகள் மழையில் நனைந்ததால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வைக்கோல் கட்டுகளை விவசாயிகளிடமிருந்து வெளியூர் பகுதி வியாபாரிகள் வாங்கி செல்வதால் உள்ளூர் பகுதி கால்நடை வளர்ப்பவர்கள் வைக்கோல் கிடைக்காமல் அவதி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கால்நடைகளுக்கு தரிக்கப்பட்டு வரும் வைக்கோல் கட்டுகளும் மழையில் நனைந்து சேதம்.

கால்நடைகளுக்கு தரிக்கப்பட்டு வரும் வைக்கோல் கட்டுகளும் மழையில் நனைந்து சேதம். - படம் - தினமணி

Summary

Paddy bags kept by farmers at procurement centres in the Sirkazhi area were damaged after getting drenched in sudden heavy rain on Monday (Sept. 14).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.