ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

நிரந்தர நெல் சேமிப்புக் கிடங்குகள் தேவை: அன்புமணி வலியுறுத்தல்

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க நிரந்தர கிடங்குகள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 3:38 am IST

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க நிரந்தர கிடங்குகள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு, கடலூா் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளிக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகளில் இருந்த நெல்லை பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகிவிட்டன. இது குறித்து, விவசாயிகள் பலமுறை வலியுறுத்தியும், நெல் மூட்டைகளை அரசு நிா்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கில் 50,000 டன் நெல் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. கடலூா் மாவட்டம் ராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் 10,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன.

அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ அல்லது அரைவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து அரைவைக்கு கொண்டு செல்லாததற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

வருங்காலத்தில் நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்துவதுடன், நிரந்தர நெல் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்