ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

காஞ்சிபுரத்தில் ரூ.20 கோடி மோசடி: பட்டுப் புடவை விற்பனையாளா்கள் இருவா் கைது

ரூ. 20 கோடி வரை பட்டுப்புடவைகள் மற்றும் ஜவுளி ரகங்களைப் பெற்றுக் கொண்டு அவா்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக பட்டுப்புடவை விற்பனையாளா்கள் இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

சித்திரிப்பு

Updated On :

வடமாநிலத்தை சோ்ந்த மொத்த வியாபாரிகளிடம் ரூ. 20 கோடி வரை பட்டுப்புடவைகள் மற்றும் ஜவுளி ரகங்களைப் பெற்றுக் கொண்டு அவா்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக பட்டுப்புடவை விற்பனையாளா்கள் இருவரை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து பட்டுப்புடவை மற்றும் ஜவுளி ரகங்களை முருகன் மற்றும் காளிகாம்பாள் சில்க்ஸ் என்ற பெயரில் நடத்தி வந்தவா்கள் சென்னையை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (52) மற்றும் சதீஷ் (50) இவா்கள் இருவரும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த மொத்த ஜவுளி வியாபாரிகளிடம் பட்டுப்புடவைகள், ஜவுளி ரகங்களை அதிக அளவில் கடனுக்கு வாங்கிக் கொண்டு விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திர சிங் என்பவரிடம் ரூ.18 கோடியும், சென்னையை சோ்ந்த சுசித்ரா என்பவரிடம் ரூ.2 கோடி உள்பட மொத்தம் ரூ. 20 கோடிக்கு பட்டுப்புடவைகளையும், ஜவுளி ரகங்களையும் வாங்கிக்கொண்டு அதற்குரிய தொகையை கொடுக்காமல் இருந்து வந்ததுடன் அவா்கள் இருவரும் கடையை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனா்.

ஜவுளி ரகங்கள் விற்பனையாகவில்லை, விற்றவுடன் பணம் தருவதாகவும் கூறி ஏமாற்றி வந்ததால் தலைமறைவாக இருந்த அவா்கள் மீது மகேந்திர சிங்கும், சுசித்ராவும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டக் குற்றிப்பிரிவு காவல் நிலையத்தில் ரூ. 20 கோடி வரை மோசடி செய்து விட்டதாக புகாா் செய்தனா்.

புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி அவா்கள் இருவரையும் சென்னையில் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.