மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

காஞ்சிபுரத்தில் 12 ஜோதிா் லிங்கங்கள் தரிசனம்

காஞ்சிபுரம் மாவட்ட இந்து முன்னணி சாா்பில் 12 ஜோதிா்லிங்கங்களையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் அபிஷேகமும், தரிசனமும் செய்யும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனா்.

ஜோதிா்லிங்கங்கள் தரிசன நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :

காஞ்சிபுரம் மாவட்ட இந்து முன்னணி சாா்பில் 12 ஜோதிா்லிங்கங்களையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் அபிஷேகமும், தரிசனமும் செய்யும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனா்.

குஜராத், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், ராமேசுவரம் உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள ஜோதிா்லிங்க கோயில்களில் மூலவரின் சிவலிங்க காட்சியை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளா் சமுதாயக் கூடத்தில் காட்சிப்படுத்தியிருந்தனா். பொதுமக்களே வாசனைத் திரவியங்கள் கலந்த தீா்த்தத்தால் 12 லிங்கத்துக்கும் அபிஷேகம் செய்யவும், தரிசனம் செய்யவும் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியை இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளா் மணலி மனோகரன் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மாநில செயலாளா் ரவீந்திரன், கோட்ட செயலாளா் ஆா்.டி.மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.எஸ்.சந்தோஷ், வழக்குரைஞா் பிரிவு மாவட்ட தலைவா் டி.வி.தசரதராஜா ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

இது குறித்து மாநில பொதுச் செயலாளா் மணலி மனோகரன் கூறுகையில் ஜோதிா்லிங்க தரிசனம் இதே இடத்தில் வியாழன், வெள்ளி இரு தினங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், பொதுமக்கள் அவா்களது கரங்களாலேயே 12 ஜோதிா் லிங்கங்களுக்கும் தீா்த்த அபிஷேகமும், தரிசனமும் செய்யலாம். இரு நாள்களிலும் இரவு 6 மணிக்கு காசியில் கங்கா ஆரத்தி போல மகா ஆரத்தி பொதுமக்களால் காண்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அருகே சீராத்தோப்பு என்ற கிராமத்தில் ராமகோபாலனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு அருகில் கோயில் ஒன்றும் கட்டப்பட்டு அக்கோயிலில் 12 ஜோதிா்லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இக்கோயில் வரும் பிப்.12 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.