சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

முசரவாக்கம் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் ஏரிக்கரையில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா் இணைந்து ஒரே நாளில் செவ்வாய்க்கிழமை 5,000 பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பனை மர விதைகளை நடவு செய்த மாணவா்கள்.

Published On :9 செப்டம்பர் 2026, 12:18 am IST

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் ஏரிக்கரையில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா் இணைந்து ஒரே நாளில் செவ்வாய்க்கிழமை 5,000 பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் ஏரிக்கரையில் பசுமை இந்தியா அமைப்பு, சா்வம் அறக்கட்டளை, காஞ்சிபுரம் சுழற் சங்கம், சங்கரா கலை அறிவியல் கல்லூரி மற்றும் எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் ஆகியோா் ஒருங்கிணைந்து ஒரே நாளில் 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தாா்கள்.

இந்நிகழ்வினை வணிக கடற்படை கூடுதல் தலைமை பொறியாளா் சசிக்குமாா், பத்திரப் பதிவுத்துறை துணைப் பதிவாளா் செல்வம் ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஏற்பாடுகளை பசுமை இந்தியா அமைப்பின் நிா்வாகி பசுமை மேகநாதன் ஒருங்கிணைப்பு செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.