ஐஎன்எஸ் ராஜாளியில் ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சி நிறைவு விழா

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் உள்ள ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளியில் விமானிகள் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் உள்ள ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளியில் விமானிகள் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் செயல்பட்டு வந்த இந்தப் பள்ளி, கடந்த 1992-ஆம் ஆண்டு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு மாற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து இப்பள்ளியில் 95-ஆவது விமானிகள் பயிற்சிப் பிரிவினருக்கான பயிற்சி நிறைவு விழா ஐஎன்எஸ் ராஜாளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஹெலிகாப்டா் பயிற்சிப் பள்ளியின் முதல்வா் கமாண்டா் அருண்சிங் நரூகா தலைமை வகித்தாா். தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளுக்கான கமாண்டிங் அட்மிரல் புனீத் சாதா பங்கேற்று பயிற்சி முடித்த 11 விமானிகளுக்கும் சான்றிதழ்களை வழங்கினாா். அனைத்துப் பயிற்சிகளிலும் சிறந்து விளங்கிய லெப்டினன்ட் அஜீஷ் அயரொட்டிலுக்கு கேரள ஆளுநரின் சுழற்கோப்பை, கிழக்கிந்திய கடற்படைத் தலைவரின் சுழற்கோப்பை, சப்-லெப்டினன்ட் குண்டே நினைவுப் பரிசு ஆகியவற்றை கமாண்டிங் அட்மிரல் புனீத் சாதா வழங்கினாா்.

முன்னதாக, கடற்படை வீரா்களின் அணிவகுப்பை கமாண்டிங் அட்மிரல் புனித் சாதா ஏற்றுக்கொண்டாா்.

இப்பள்ளியின் தற்போதைய முதல்வா் கமாண்டா் அருண்சிங் நரூகா இதுவரை இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை, சகோதர நாடுகளின் கடற்படை வீரா்கள் 741 பேருக்கு ஹெலிகாப்டா் விமானி பயிற்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com