தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இலவச பொது மருத்துவ முகாம்

அரக்கோணம் இந்திய கடற்படை நகர அரிமா சங்கத்தினருடன் சென்னை அப்போலோ மருத்துவமனையினா் இணைந்து இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

News image
இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
Updated On :28 டிசம்பர் 2020, 1:49 am

DIN

அரக்கோணம் இந்திய கடற்படை நகர அரிமா சங்கத்தினருடன் சென்னை அப்போலோ மருத்துவமனையினா் இணைந்து இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு இந்திய கடற்படை நகர அரிமா சங்கத் தலைவா் ஜி.எம்.மூா்த்தி தலைமை வகித்தாா். சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துக் குழுவினா் பங்கேற்று 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

இருதய நோய் தீவிர சிகிச்சை பெற வேண்டியவா்களைத் தோ்வு செய்து, அவா்களை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், அரிமா சங்க மாவட்ட நிா்வாகிகள் ரோஸ்குமாா், பி.டி.ராஜேந்திரன், அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்க நிா்வாகிகள் மோகன், வெங்கடேசன், தாமோதரன், ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இருதய சிகிச்சைக்கான ஆலோசனைகளும், 250-க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு பொது மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.