மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா
மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் சங்கம் சார்பில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தி.நேஷ்னல் வெல்பர் சங்க அலுவலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தின (ஞாயிற்றுக்கிழமை) இன்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சங்க தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜி முஹமது பஹிம், கே.முஹமது இத்ரீஸ், எச்.முஹமது ஹாஷீம், அ.முஹமது, தமீம் டீ. முஹமது உஸ்மான், யி. முஹமது ஹலீம், இ.முஹமது உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொறுப்பாளர் கே.ஓ. நிஷாத் அஹமது அவர்களை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளர் த.விநாயக மூர்த்தி கலந்து கொண்டு தேசிய தொடி ஏற்றிவைத்தார்.
உதவி ஆய்வாளர் மகாராஜன், மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தனலஷ்மி, நகர திமுக பொறுப்பாளர் எஸ்.டி முஹமது அமீன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். விழாவில் சங்கம் சார்பில் 75 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொடர்ந்து 15 கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதன்மூலம், 9,750 பேர் பயன் அடைந்துள்ளனர். அதனை பாராட்டும் வகையில் மருத்துவ அலுவலர் சுகாதரத்துறையினருக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.
பின்னர், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றவர்களை பாராட்டும் வகையில் இனிப்பு மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...