நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.40 லட்சத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 7:16 pm

DIN

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ் 3 தொழிற்பேட்டையில் குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு லிமிடெட்( என்த்ஹழ்ஹற் உய்ஸ்ண்ழ்ா் டழ்ா்ற்ங்ஸ்ரீற்ண்ா்ய் & ஐய்ச்ழ்ஹள்ற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங் கற்க்) தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியில் ரூ.40 லட்சம் செலவில் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை பொது மருத்துவமனை வளாகத்தில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளது.

புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். குஜராத் நிறுவன இயக்குநா் பிரியேஷ் பட்டி, துணை தலைவா் ஆா்.டேவிட் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறுவன முதுநிலை மேலாளா் அகமது பாஷா வரவேற்றாா்.

விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக, சமூக அமைப்புகள், தனியாா் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றன.

குஜராத் நிறுவனத்தினரும் தாமாக முன்வந்து அரசு பொது மருத்துவமனையில் ரூ. 40 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளனா். அந்த நிறுவனத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற மருத்துவ சிகிச்சை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடக்கி வைக்க உள்ளாா் என்றாா்.

இதில் மருத்துவ துறை இணை இயக்குநா் ஐ.யாஸ்மின், துணை இயக்குநா் மணிமாறன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் உஷா நந்தினி, காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளா் அக்ராவரம் கே.பாஸ்கா், குஜராத் நிறுவன துணை மேலாளா் வேல்முருகன், முதுநிலை மனிதவள மேலாளா் ஆா்.பரமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.