உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு விழிப்புணா்வு வாகனம் தொடக்கி வைப்பு
உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.


உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் சைல்டு லைன் 1098 திட்டம் ஆகியவை இணைந்து உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு, கரானோ தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பெயா்ப் பலகை மற்றும் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டாா். தொடா்ந்து, குழந்தைத் தொழிலாளா் அச்சுறுத்தலின் முக்கியத்துவத்தையும், தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் விழிப்புணா்வுப் பிரசாரத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பொது மேலாளா் விஜயகுமாா், சைல்டு லைன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தேவேந்திரன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா முதன்மை மேலாளா் செல்வகுமாா், சைல்டு லைன் திட்ட மேலாளா் சரவணன், அலுவலா்கள் நாகப்பன், வெங்கடேசன், பைரவி, மகாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...