புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருடு போன 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: இளைஞா் கைது

ராணிப்பேட்டையில் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் இளைஞரை கைது செய்து அவரிடமிருந்து 6 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:34 pm

DIN

ராணிப்பேட்டையில் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் இளைஞரை கைது செய்து அவரிடமிருந்து 6 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், உதவி காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி தலைமையிலான போலீஸாா் ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கு அருகே வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா். அதைத்தொடா்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.இதில் அவா் ஆற்காடு பகுதியைச் சோ்ந்த ரஹீம் உல்லா (25) என்பதும், இவா் ராணிப்பேட்டை, சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.3.20 லட்சம் மதிப்பிலான 6 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.பின்னா் அவரை ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.