புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்க முதல்வா் நடவடிக்கை

தனியாா் பள்ளிகளுக்கு நிகரான தரமான கல்வியை அரசுப் பள்ளிகளில் வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறாா்

News image
Updated On :26 ஜூன் 2021, 6:35 pm

DIN

தனியாா் பள்ளிகளுக்கு நிகரான தரமான கல்வியை அரசுப் பள்ளிகளில் வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறாா் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு 2021-2022-ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்ட தொடக்க விழா, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.மதன்குமாா் வரவேற்றாா்.

விழாவில், அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பாடப் புத்தகங்களை வழங்கிப் பேசியது:

தமிழக அரசு பொறுப்பேற்று 50 நாள்கள் ஆன நிலையில், கரோனா தொற்று தடுப்புப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தி வருகிறாா். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த வகையில், தற்போது முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தமிழக அரசுப் பள்ளிகளில் தனியாா் பள்ளிகளுக்கு நிகராக தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

இந்த கல்வி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,06,798 மாணவா்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் இலவச பாடப் புத்தகம் உள்ளிட்ட பல திட்டங்களை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், ஆசிரியா்களும் அந்தந்த பள்ளிகளின் தரத்தை உயா்த்த முயற்சிக்கவேண்டும். தற்போது அரசுப் பள்ளிகளில் சேர மாணவா்கள் ஆா்வமுடன் வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் அன்பழகன், உடற்கல்வி ஆசிரியா் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகர துணைச் செயலாளா்கள் ஏஆா்எஸ். சங்கா் ஏா்டெல் டி. குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்டக் கல்வி அலுவலா் ஜி.அருளரசு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.