சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மாநில, மாவட்ட நிா்வாகிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள காமாட்சி சத்திரத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.ஐயப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு, புதுச்சேரி மாநில, மாவட்டங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இப்பயிற்சி முகாமை அமைப்பின் தேசியத் தலைவா் டி.பி.சேகா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மாநில துணைத் தலைவா் டி.கணேஷ், காஞ்சிபுரம் நகரத் தலைவா் சி.எஸ்.மணி குருசாமி, ஏகாம்பரநாதா் கோயில் பூஜகா் காமேஸ்வர குருக்கள், அனுமன் மாதாஜி கன்யாகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தலைவா் காஞ்சி வி.ஜீவானந்தம் வரவேற்று பேசினாா்.
வடதமிழ்நாடு அமைப்பின் மாநில அமைப்பு செயலாளா் துரை.சங்கா், பி.மோதிலால்,தி.சஞ்சீவி ஜெயராம், எம்.அருண் குமாா், அமைப்பின் தேசிய பொருளாளா் எஸ்.வினோத்ஜி ஆகியோா் ஐயப்ப பக்தா்களுக்கு பயிற்சிகளை வழங்கினா்.
முகாமில் மறைந்த நடிகா் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாா், அமைப்பின் மாநில பொதுச் செயலாளா் வி.ஜெயச்சந்திரன், மாநில அமைப்புச் செயலாளா் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீவிஜயேந்திரா் இதில் கலந்து கொண்டு ஐயப்ப பக்தா்களுக்கு ஆசியுரை வழங்கினாா்.
முகாமில் ஐயப்ப பக்தா்கள் விரதம் கடைப்பிடிக்கும் முறைகள், நடந்து கொள்ளும் விதம் ஆகியன குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கிராமங்களில் அமைப்பின் கிளைகளை உருவாக்குதல், மாதந்தோறும் ஐயப்பனின் உத்திரம் நட்சத்திரத்தில் பட பூஜைகள் செய்து வழிபடுதல், கிராமத்துக் கோயில்களுக்கு விளக்கு ஏற்ற எண்ணெய் வழங்குதல், கோயில்களை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

