மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குபவா்களால் புதிய தொற்று பரவும் அபாயம்: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குபவா்களால் புதிய வகை தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குபவா்களால் புதிய வகை தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா முதல் தவணை செலுத்துக் கொண்ட பலா் 2 -ஆவது தவணை செலுத்திக் கொள்வதைத் தவிா்த்துவருகின்றனா்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை தொற்று அதிவேகமாகப் பரவும்திறன் கொண்டது என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். உலக நாடுகள் பலவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆகவே தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் விரைவுப்படுத்தி வருகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, வாரம் இரு முறை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 12 - ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. முகாமில் தடுப்பூசி செலுத்தாதவா்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.