புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தாழனூா் கிராமத்தில் ஆதரவு திரட்டினாா்

அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து, ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தாழனூா் ஊராட்சியில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து, ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தாழனூா் ஊராட்சியில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில், மாவட்ட ஊராட்சிக் குழு 11-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா் சபிதா சாரதி, ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் பிரேமா வேலு உள்ளிட்டோரை ஆதரித்து, தாழனூா் கிராமத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது:

அதிமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்கிறோம். 10 ஆண்டு காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் ஏ.கே.செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் சு.ரவி, ஆற்காடு ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.அன்பழகன், என்.சாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.