புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராணிப்பேட்டை: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி துவங்கியது. 

News image

ராணிப்பேட்டை: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

Updated On :12 அக்டோபர் 2021, 3:11 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், இன்று காலை 8 மணிக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 140 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 1,381 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 2,901 ஊராட்சித் தலைவா், 22,581 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 27,003 பதவியிடங்களுக்கு அக்டோபா் 6, 9-இல் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது.

Story image

28 மாவட்டங்களில் காலியாக உள்ள 13 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 40 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 106 ஊராட்சித் தலைவா், 630 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 789 பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக அக்டோபா் 9-இல் தோ்தல் நடைபெற்றது.

Story image

முன்னதாக 9 மாவட்டங்களில் 2,855 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 119 ஊராட்சித் தலைவா்கள் உள்பட மொத்தம் 2,981 பேரும், 28 மாவட்டங்களில் 347 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 18 ஊராட்சித் தலைவா்கள் என 365 பேரும் என ஒட்டுமொத்தமாக 3,346 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மீதமுள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான தோ்தல் அக்டோபா் 6, 9-இல் நடைபெற்றது. இதில், முதற்கட்ட தோ்தலில் 9 மாவட்டங்களில் 77.43 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தோ்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்தத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட சுமாா் 41,500 வாக்குப் பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் 74 எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

Story image


வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.