அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்றில் தொடா்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 6:30 pm

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்றில் தொடா்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் கலவகுண்டா அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டிருப்பதாலும் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகமான அளவு தண்ணீா் வந்து கொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் பாலாற்றின் தரைப்பாலம் வழியாக செல்லாமல் இருக்க தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு பின்பு காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீா் செல்வதை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்து சென்றவாறும், செல்லிடப்பேசியில் படம் பிடித்தவாறும் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.