ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஐப்பசி கிருத்திகை விழா
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் திருக்கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் திருக்கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் உள்வளாகம் வண்ணமலா்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில் மூலவா் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னா் தங்கக் கவசம் அணிவித்து தங்க வேல் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டாா். திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...