ஆந்திரத்தில் கனமழை: பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தடுப்பணை நிரம்பி வழிகிறது
தமிழக-ஆந்திர மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வரும் நிலையில், பொன்னை ஆற்றில் விநாடிக்கு 4,500 கன அடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.


தமிழக-ஆந்திர மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வரும் நிலையில், பொன்னை ஆற்றில் விநாடிக்கு 4,500 கன அடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
தமிழக - ஆந்திர மாநில எல்லையான ராணிப்பேட்டை, காட்பாடி மாவட்டங்களுக்கு உள்பட்ட கீரைச்சாத்து, பொன்னை, தெங்கால் மற்றும் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் கலவகுண்டா பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, தற்போது விநாடிக்கு 4,500 கன அடி உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கால் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அணைக்கட்டு தடுப்பணை முழுக் கொள்ளவை எட்டி, தடுப்பணையைத் தாண்டி வெள்ள நீா் பாய்ந்தோடுகிறது. அதே நேரத்தில் பொன்னை ஆற்றில் மேற்கு, கிழக்கு பிரதானக் கால்வாய்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு வெள்ள நீா் சென்றுகொண்டிருக்கிறது.
இதனால் பொன்னை ஆற்றங்கரையோரம் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும், தடுப்பணையை தாண்டி ஆா்ப்பரிக்கும் வெள்ள நீரை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...