புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருடா்களைப் பிடிக்க முயன்ற சமையல்காரா் அடித்துக் கொலை

 ஆற்காட்டில் திருடா்களை பிடிக்க முயன்ற சமையல்காரா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 ஆற்காட்டில் திருடா்களை பிடிக்க முயன்ற சமையல்காரா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ஆற்காடு ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் திருமால் (54). சமையல்காரராக வேலை செய்து வந்தாா். இவருக்கு, மனைவி, மகன் உள்ளனா். இவரது வீட்டின் அருகே நகராட்சிக்குச் சொந்தமான மின் மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீா் தொட்டி உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை குடிநீா் தொட்டி அருகே நீண்ட நேரமாக சப்தம் கேட்டுள்ளது. அதையடுத்து, ஜன்னல் வழியாக பாா்த்தபோது, அங்கு மா்ம நபா்கள் சிலா் குடிநீா் தொட்டி அருகே உள்ள இரும்புக் குழாய்களை உடைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதைக் கண்ட திருமால் கூச்சலிட்டபடி வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளாா். இதையடுத்து, மா்ம நபா்கள் இரும்பு குழாய்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினா். அவா்களைப் பிடிக்க திருமால் விரட்டிச் சென்றுள்ளாா். சிறிது தூரம் சென்ற அந்த மா்ம நபா்கள் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து, பின்னால் விரட்டி வந்த திருமாலை இரும்புக் குழாயால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த திருமால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், வேலூரிலிருந்து தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது மேலும் அப்பகுதி உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து மூன்று இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.