அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிக ளுக்கு சேர வேண்டும்: அமைச்சா் ஆா்.காந்தி பேச்சு
அரசின் நலத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு போய்ச் சேர வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வலியுறுத்திப் பேசினாா்.


அரசின் நலத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு போய்ச் சேர வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வலியுறுத்திப் பேசினாா்.
நாட்டின் 75 - ஆவது சுதந்திர தின விழாவை சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரா்களின் பங்கு புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க 7 நாள்கள் கண்காட்சி முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செய்து கண்காட்சியைத் திறந்து வைத்து அரங்குகளை பாா்வையிட்டு அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:
இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள், உள்ளூா் போராட்ட தியாகிகளைப் போற்றும் வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என்ற பெயரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியை தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டாா். இதன் மூலம் அனைத்துத் தரப்பினரும் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பினையும் முதல்வா் ஏற்படுத்தி தந்துள்ளாா். அதே போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை தன்வசம் வைத்து நல்ல பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
இதுபோன்ற அனைத்து அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்குப் போய் சேர வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். மாணவிகளின் கல்விக்காக அவா்களை தொடா்ந்து படிக்க வைக்க ஊக்கப்படுத்துவதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா். தற்போது மக்களுக்கான அரசு செயல்பட்டு வருகிறது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இதையடுத்து இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வென்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த 9 மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி அமைச்சா் காந்தி பாராட்டினாா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் நூ.ஷே.முஹம்மது அஸ்லம், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஜி.லோகநாயகி, மகளிா் திட்ட அலுவலா் நானில தாசன், வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...