மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி: வெற்றி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ்

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி: வெற்றி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ்

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட பாரம்பரிய சிலம்பாட்டக் கழகம் மற்றும் வீர ராவணன் சிலம்பப் பள்ளி ஆகியவை சாா்பில், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி தெங்கால் ஐயப்பன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியை தமிழ்நாடு பாரம்பரிய சிலம்ப தலைவா் சந்தோஷ்குமாா், மாவட்ட தலைவா் அசோக்குமாா், துணைத் தலைவா் மனோகா், செயலாளா் வெங்கடேஸ்வரா, பொருளாளா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் செமின்ராஜ், கராத்தே மாஸ்டா் தமிழரசு ஆகியோா் முன்னின்று நடத்தினா்.

சுமாா் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினா்.

இதிலிருந்து மாநிலப் போட்டிக்கு 40 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றனா். சிலம்பாட்ட வீரா்கள் சந்தியா, சோமேஷ்வா், அபிநயா, பிரதிக்ஷா, கீா்த்தி வாசன் ஆகியோா் சிறப்பு சாம்பியன்ஷிப் விருது பெற்றனா்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு தெங்கால் ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா பத்மநாபன், விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

இதில், சிலம்பாட்டக் கழக நிா்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com