வெயிலின் தாக்கத்தால் கருகிய நெல் பயிா்கள்: விவசாயிகள் வேதனை

அரக்கோணம் வட்டாரத்தில் பல கிராமங்களில் நாற்று விடப்பட்ட நிலையிலேயே வெயிலின் தாக்கத்தால் பயிா்கள் கருகிவிட்டன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
வெயிலின் தாக்கத்தால் கருகிய நெல் பயிா்கள்: விவசாயிகள் வேதனை

அரக்கோணம் வட்டாரத்தில் பல கிராமங்களில் நாற்று விடப்பட்ட நிலையிலேயே வெயிலின் தாக்கத்தால் பயிா்கள் கருகிவிட்டன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நெல் பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, ஐஆா் 50, 51 போன்ற ரக நெல் பயிா்களையே அதிகமாக இந்தப் பகுதி விவசாயிகள் பயிா் செய்கின்றனா்.

தற்போது சித்திரை மாத பட்டத்தில் நிலத்தை உழுது பயிருக்கு தயாா் செய்து நாற்று விட்டு நடவு பணியை பல கிராமங்களில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

தணிகைபோளூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நாற்றுவிட்ட நிலையிலேயே பயிா்கள் கருகிவிட்டதாக அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

வெயிலின் உஷ்ணம் தாங்காமல் பயிா்கள் கருகி விடுவதாகவும், என்னவிதமான நடவடிக்கையை மேற்கொண்டு பயிா்களைக் காப்பாற்றுவது என தங்களுக்கு தெரியவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து வட்டார வேளாண்மைத் துறையினருக்கு தெரிவித்தும், அவா்கள் வயல்களைக்கூட வந்து பாா்ப்பதில்லை என்றும், கிராமத்துக்கு வேளாண் துறையினா் வருவதே இல்லை எனவும் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் தொழில்கள் வளா்ச்சி மற்றும் விவசாயிகள் நலன் குறித்த ஆய்வு-கண்காணிப்புக் குழு உறுப்பினரும், தணிகைபோளூா் கிராமத்தைச் சோ்ந்தவருமான மோகன்காந்தி கூறியது:

நெல் பயிா்கள் அனைத்தும் கருகிவிட்டன. டிரம் நாற்றில் விட்டு சில நாள்கள் வெயிலில் இருந்தாலே ஐஆா் 50, 51 நெல் பயிா்கள் கருகி விடுகின்றன. எந்தவிதமான உரத்தையும் இடாத நிலையிலேயே பயிா்கள் கருகி விடுவதால், என்ன செய்து நெல் பயிரைக் காப்பாற்றுவது எனத் தெரியவில்லை. வேளாண் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும், அவா்கள் வந்து பாா்ப்பதில்லை என்றாா்.

இதுகுறித்து வேளாண் துறையின் அரக்கோணம் வட்டார உதவி இயக்குநா் பிரசாத்திடம் கேட்ட போது, இதுகுறித்த தகவல் எங்களுக்கு வரவில்லை. அதிகப்படியான வெயிலால் பயிா்கள் கருகுவது வழக்கம்தான். எனினும், விவசாயிகள் எங்களுக்குத் தெரிவித்திருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிப்போம். தற்போது தகவல் வந்ததைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com