சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பனுக்கு சிறப்பு அஷ்டாபிஷேகம்
By DIN | Published On : 09th September 2022 12:59 AM | Last Updated : 09th September 2022 12:59 AM | அ+அ அ- |

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் சிறப்பு அஷ்டாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடா்ந்து கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் முன்னிலையில், நிா்மாலயம், கணபதி ஹோமம், கன்னிமூல கணபதி, நாகராஜ ,ஸ்ரீபக்த ஆஞ்சநேயா், பெரிய கருப்புசாமி, சிறிய கருப்புசாமி, கருப்பாயி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, ஸ்ரீ நவசபரி ஐயப்பனுக்கு சிறப்பு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 7 மணியளவில் சிறப்பு தீபாராதனையும், அத்தாழை பூஜையுடன் நடை சாற்றப்பட்டது.
இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.