பக்ரீத்: ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

ராணிப்பேட்டை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வரும் நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வரும் நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்க குவிந்து வருவதால் ரூ.2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சந்தைமேடு வாரச்சந்தை மைதானத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறுகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருத்தணி மற்றும் ஆந்திரத்தின் பல பகுதிகளிலிருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பனை செய்வதற்காக எடுத்து வருகின்றனர். அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று நடைபெற்ற சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. 

ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆடுகளை வாங்கக் குவிந்ததால் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகளின் விலை சற்று அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், ஒரு ஜோடி ஆடுகள் 30,000 முதல் 50,000 ரூபாய் வரை விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com