

வாலாஜாப்பேட்டை ஸ்ரீ சங்கர மடத்தில் முப்பெரும் விழாவில், காஞ்சி மகாபெரியவர் அனுஷ பூஜை புத்தகம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
வாலாஜாபேட்டை மாசிலாமணி நகர் பகுதியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட சங்கர மடம் கடந்த 1984 இல் காஞ்சி மகா பெரியவரால் ஸ்தாபிக்கப்பட்டது. சுமார் 39 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடத்தில் புணரமைக்கப்பட்ட கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீ சங்கர மடத்தில் அனுஷம், திருவாதிரை, பூர்ண பூசம் போன்ற நிகழ்ச்சிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோயிலின் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா, ஸ்ரீ ஜெயேந்திரரின் ஆராதனை விழா, ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரின் அனுஷ பூஜை புத்தகம் வெளியீடு என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீ ஹரி சாஸ்திரிகளின் சிஷ்யர்கள் சுப்பிரமணிய சாஸ்திரி, ஸ்ரீ நாகராஜ சாஸ்திரிகளால் வேத பாராயணம், லலிதா சகஸ்ரநாமம், மகளிர் குழுவால் பாராயணம் நாம சங்கீர்த்தனம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரின் அனுஷ பூஜை புத்தகம் வெளியிடப்பட்து. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கர மட நிர்வாகிகள் சுந்தரேசன், ராஜசேகரன், ரவிகாந்தன், பார்த்தீபன், ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.