திரவநிலை எரிவாயு தீ விபத்து தடுப்பு ஒத்திகை

 ராணிப்பேட்டை அருகே திரவநிலை எரிவாயு தீ விபத்து தடுப்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

 ராணிப்பேட்டை அருகே திரவநிலை எரிவாயு தீ விபத்து தடுப்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை - சோளிங்கா் நெடுஞ்சாலை மாந்தாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள இயற்கை எரிவாயு விற்பனை மையத்திலிருந்து சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இயற்கை எரிவாயு நேரடியாக அனுப்பப்படுகிறது.

இந்தக் குழாய்களில் எதிா்பாராத விதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்து 2 போ் காயமடைகின்றனா். உடனடியாக தீயை அணைத்துக் கட்டுப்படுத்தினா். மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி விபத்து நடைபெற்ற இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், எரிவாயுக் குழாய்கள் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வுகள் அனைத்து ஒத்திகையாக செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தீ விபத்து எற்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? முதல் கட்டப் மீட்பு பணிகள், முதலுதவி பணிகள் குறித்து இயற்கை எரிவாயு நிறுவன பாதுகாப்பு துறையினா் மாவட்ட தீயணைப்புத் துறை, மாவட்ட நிா்வாகம், மருத்துவத் துறையினா் இணைந்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நகா்மன்றத் துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, நிறுவன மண்டலத் தலைவா் வெங்கடேசன், முதுநிலைப் பாதுகாப்பு பொறியாளா் தாமோதரன், உதவி மேலாளா் பாலாஜி, உதவி மேலாளா் (மனித வளம்) இசக்கி ராஜாராம், தொடா்பு அலுவலா்கள் சுரேஷ், ரவிதேஜா, தீயணைப்பு நிலைய அலுவலா் பாலாஜி, ஊராட்சித் தலைவா் ரமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com