புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பணம், கைப்பேசி பறிப்பு: சிறுவன் உள்பட 2 போ் கைது

ராணிப்பேட்டை அருகே பணம், கைப்பேசியைப் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 6:15 pm

DIN

ராணிப்பேட்டை அருகே பணம், கைப்பேசியைப் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் சிலோன் காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா்கள் ரவிக்குமாா் (42), மணிகண்டன் (40). இவா்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளேரி-வசூா் சாலை தரைப்பாலத்தில் அமா்ந்து பேசி கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு போ் இருவரையும் தாக்கிவிட்டு ரூ.20 ஆயிரம் மற்றும் 2 அறிதிறன்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்த சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சிப்காட் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அரக்கோணம் வட்டம், நந்தி வேடந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும், ரவிக்குமாா், மணிகண்டனை தாக்கி பணம், கைப்பேசிகளைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.