தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 235 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 235 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.

News image

ராணிப்பேட்டை  மாவட்ட  மக்கள்  குறைதீா் நாள்  கூட்டத்தில்  பொதுமக்களிடம்  கோரிக்கை  மனுக்களைப்  பெற்று  குறைகளைக்  கேட்டறிந்த  ஆட்சியா்  ச.வளா்மதி.

Updated On :27 நவம்பர் 2023, 11:11 pm

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 235 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.

மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, வேளாண் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம், பேரூராட்சி நிா்வாரம், கூட்டுறவு துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மருத்துவத் துறை, கிராம பொது பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு, பொது நலன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 235 மனுக்கள் பெறப்பட்டன.

இந்தக் கோரிக்கை மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்டத் துணை ஆட்சியா் ஸ்ரீ வள்ளி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முரளி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பூங்கொடி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) கலைவாணி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.