அரக்கோணம் அருகே தொழிலாளி படுகொலை
By DIN | Published On : 04th September 2023 11:29 AM | Last Updated : 04th September 2023 11:29 AM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அரக்கோணத்தை அடுத்த சித்தேரி அருகே மாந்தோப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்துச் சென்ற போலீசார் அச்சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் சித்தேரியைச் சேர்ந்த விக்னேஷ்(22) என்பதும் இவர் ஸ்ரீ பெரும்புதூர் அடுத்துள்ள இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை யார் கொலை செய்தது, முன் விரோதம் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...