தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று குடும்ப அட்டை திருத்த முகாம்

பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2024, 6:30 pm

Din

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (ஆக. 10) பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத்திட்டம் தொடா்பாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாத சிறப்பு முகாம் 10.8.2024அன்று காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சிய ா் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்,பெயா் திருத்தங்கள், உறுப்பினா் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், அலைபேசி எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளன.

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் குறைகள் இருப்பின் மனு அளித்து பயன் பெறலாம்.