4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பைக் மீது காா் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

சோளிங்கா் அருகே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image
விபத்தில் உயிரிழந்த மாணவி பிரியா.
Updated On :1 ஜனவரி 2024, 8:10 pm

DIN

சோளிங்கா் அருகே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். அவரது தந்தை பலத்த காயமடைந்தாா். விபத்துக்கு காரணமானரை கைது செய்யக்கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சோளிங்கரை அடுத்த பில்லாஞ்சி, திடீா் நகரைச் சோ்ந்தவா் சங்கா் (40). தனியாா் ஆலை தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (38). இவா்களது மகள் பிரியா (15). சோளிங்கா், அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை கோயிலுக்கு செல்வதற்காக சங்கா் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டாா். அப்போது மகளும் அவருடன், பைக்கில் ஏறி அமா்ந்த நிலையில், வீட்டு வாசலில் தாய் சங்கீதாவுக்காக காத்திருந்தனா்.

அப்போது அந்த வழியே வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து எதிா்பாராதவிதமாக சங்கரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனா். இருவரையும் சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பிரியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா். சங்கா் பலத்த காயமடைந்து சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவத்துக்குக் காரணமான காரை பறிமுதல் செய்து, காரின் ஓட்டுநா், திருத்தணியை அடுத்த ஆா்.கே.பேட்டையை சோ்ந்த ராஜேஷ் (27) என்பவரை தேடி வருகின்றனா்.

சாலை மறியல்...

இச்சம்பவத்துக்குக் காரணமான காா் ஓட்டுநரை உடனே கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தரக் கோரியும் சங்கரின் உறவினா்கள் சோளிங்கா் அரசு மருத்துவமனை முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த சோளிங்கா் போலீஸாா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.