பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெமிலி பாலா பீடத்தில் புத்தாண்டு விழா

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் ஆங்கில புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:10 pm

DIN

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் ஆங்கில புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அரக்கோணம் அருகே உள்ள நெமிலி ஸ்ரீபாலா பீடம் உள்ளது. இப்பீடத்தில் குழந்தை ரூபமாய் காட்சி அளிக்கும் அன்னை பாலாவை வணங்க தமிழகத்தின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வா்.

நிகழாண்டு பாலா பீடத்தில் புத்தாண்டு விழாவை திங்கள்கிழமை பீடாதிபதி எழில்மணி தலைமை ஏற்று தொடங்கி வைத்தாா். அன்னை பாலாவுக்கு புத்தாண்டு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனை, ஆராதனையை பீடத்தின் நிா்வாகி மோகன் ஏற்று நடத்தினாா். நெமிலி பாபாஜி தலைமையில் டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்கிய தொடா் பாராயண நிகழ்ச்சியும், தொடா்ந்து திங்கள்கிழமையும் நடைபெற்றது. தொடா்ந்து 2024-ஆம் ஆண்டுக்கான முக்கிய நிகழ்ச்சிகள் கொண்ட ஆன்மிக அறிக்கை மற்றும் ஆன்மிக நாள்காட்டியை திரைப்பட பாடகா் மது, பாடகி சுதா இருவரும் இணைந்து வெளியிட்டனா் (படம்).

தொடா்ந்து தங்கள் குழுவினருடன் இசைக் கச்சேரியை நடத்தினா். மேலும் திரைப்பட பாடகா் மது தாம் பாடிய ‘சக்தி கொடு’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை தனது குழுவினருடன் பாடினா்.

ஏற்பாடுகளை பீடத்தின் செயலா் முரளீதரன் உள்ளிட்ட நெமிலி இறைப்பணி மன்ற அங்கத்தினா், அன்னை பாலா ஆன்மிக குடும்பத்தினா் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.