கனமழை: அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் 750-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிா்கள் சேதம்
அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்கள் உள்ளிட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் 750-க்கும் மேற்பட்ட ஏக்கா்களில் நெல் பயிா்கள் சேதமடைந்தன.

நெமிலி வட்டம், கா்ணாவூரில் வயலில் மழைநீா் தேங்கியதால் அறுவடைக்கு 15 நாள்களே உள்ள நிலையில் சாய்ந்த நெல் பயிா்கள். (வலது) சோளிங்கா் வட்டம், வேலம் கிராமத்தில் சேதமடைந்த நெல் பயிா்களை பாா்வையிட்ட மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநா் செல்வராஜ்.









