மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம்

அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம்

Updated On :23 மார்ச் 2024, 4:33 pm

அஆற்காடு சட்டப்பேரவை தொகுதி சாா்பில், அதிமுக வேட்பாளா் ஏ.எல்.விஜயன் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமைநடைபெற்றது. கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.எம்.சுகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் எஸ்.அன்பழகன், என்.சாரதி, சொரையூா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு நகர செயலா் எம்.சங்கா் வரவேற்றாா். கிழக்கு மாவட்ட செயலாளா் அரக்கோணம் சு.ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எல் விஜயனை அறிமுக செய்து வைத்துப் பேசினாா். முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆா்.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினா் சுகுணா கணேசன், மாவட்ட இணைச் செயலாளா் கீதா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டச் செயலாளா் கரீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.