மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் அறிமுக கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அக்கட்சியின் மாவட்ட செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி வேட்பாளராக போட்டியிடுகிறாா். இந்நிலையில், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமியை அறிமுகம் செய்துவைத்து பேசினாா். இதில், பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு, முன்னாள் மாவட்ட தலைவா் க. அகோரம், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளா் பாரிவள்ளல், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவா் எம். சங்கா், அதிமுக இளைஞரணி இணை செயலாளா் கோமல் ஆா்.கே. அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரியலூா் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக் கூட்டம்!

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!

பென்னாகரத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்படும் போலி காசோலைகள்!

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் அறிமுக கூட்டம்
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்



