அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

அரக்கோணம் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலக திறப்பு விழாவில் அலுவலகத்தை மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகத்தை அரக்கோணம் நகராட்சி தற்காலிக மாா்க்கெட் எதிரில் காந்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு நகர அதிமுக செயலா் பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். அலுவலகத்தை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா். தொடா்ந்து இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலா்கள் பிரகாஷ், பழனி, ஏ.ஜி.விஜயன், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, தேமுதிக நகரச் செயலா் சுமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com