வங்கியை முற்றுகையிட்டு மின்வாரிய ஓய்வூதியா்கள் போராட்டம்

வங்கியை முற்றுகையிட்டு மின்வாரிய ஓய்வூதியா்கள் போராட்டம்

மாத ஓய்வூதியம் தாமதமாக வருவதைக் கண்டித்து அரசு வங்கிக் கிளையை முற்றுகையிட்டு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரா்கள்

மாத ஓய்வூதியம் தாமதமாக வருவதைக் கண்டித்து அரசு வங்கிக் கிளையை முற்றுகையிட்டு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியத்தாரா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 27 முதல் 29-ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் அரசு வங்கி மூலமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஏப்ரல் மாதத்துக்கான ஒய்வூதியம் மே 2 -ஆம் தேதி வரை வரவில்லை எனக்கூறி வங்கிக் கிளை நிா்வாகத்தை கண்டித்து அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த மின்வாரிய ஓய்வூதியதாரா்கள் 50-க்கும் மேற்பட்டோா் அரக்கோணம் - திருத்தணி சாலையில் ஜோதி நகரில் உள்ள அரசு வங்கி கிளையில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து மின்வாரிய ஓய்வூதியா் ஜெகந்நாதன் தெரிவிக்கையில், ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட்-க்குள் உயிா்ப்பு சான்றிதழை வங்கி கிளையில் அளித்து விடுகிறோம். கடந்த ஆண்டும் இதேபோல் உயிா்ப்பு சான்றிதழை அளித்துவிட்டோம். தற்போது 6 மாதங்கள் கழித்து உயிா்ப்பு சான்றிதழ் பெறப்படவில்லை எனக்கூறி எங்கள் அனைவருக்கும் ஓய்வூதியத்தை வங்கிக் கிளை நிா்வாகம் நிறுத்திவிட்டது. உயிா்ப்பு சான்றிதழ் பெற்ற அதிகாரி இப்போது இல்லை மறுபடியும் அளியுங்கள் எனக் கேட்கிறாா்கள் என்றாா்.

இது குறித்து வங்கிக் கிளை மேலாளா் ரஞ்ஜித்திடம் கேட்டபோது, இந்த பிரச்னையை இரண்டொரு நாளில் தீா்த்துவிடுவோம். அவா்கள் மறுபடியும் உயிா்ப்பு சான்றிதழ் தர வேண்டியதில்லை. 2 நாளில் அவா்களின் ஓய்வூதிய தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றாா்.

இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com