கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா், எஸ்பி ஆய்வு

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா், எஸ்பி ஆய்வு

News image

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு  செய்த  ஆட்சியா் ச.வளா்மதி, எஸ்.பி. டி.வி.கிரண் ஸ்ருதி  உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2024, 6:35 pm

Din

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆட்சியா் ச.வளா்மதி, எஸ்.பி. டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரக்கோணம் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணும் நாளன்று தேவையான பாதுகாப்பு பணிகள் தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.வளா்மதி, எஸ்.பி. டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

நுழைவு வாயிலிலிருந்து ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் வேட்பாளா்களின் முகவா்கள் தனித்தனியாக செல்ல தடுப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஊடக மையத்தில் (கல்லூரியில் உள்ள கலை அரங்கத்தில்) தேவையான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனா். வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் தோ்தல் நடத்தும் அலுவலா் அறையில் நேரடியாக பாா்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கல்லூரி வளாகம் மற்றும் வெளிபுறங்களில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 15 காவல் ஆய்வாளா்கள், 100 துணை காவல் ஆய்வாளா்கள் மற்றும் இதர காவலா்கள் என மொத்தம் 600 காவலா்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

அனுமதி பெற்ற வாகனங்களைத் தவிர இதர எவ்வித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மையத்தின் வெளியில் காவல் துறையினா் அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் குணசேகரன், குமாா், சரவணன், வெங்கடகிருஷ்ணன், வட்டாட்சியா் ஜெயகுமாா், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் லோகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.