கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நீா்நிலைகளில் மாசு ஏற்படுத்தினால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை

நீா்நிலைகளில் மாசு ஏற்படுத்தினால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை.

News image

ராணிப்பேட்டை ஆட்சியா் ச.வளா்மதி தலைமையில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற துறைசாா்ந்த அலுவலா்கள்.

Updated On :28 மே 2024, 6:38 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீா்நிலைகளில் மாசு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா் நிலைகளை பாதுகாப்பது குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்துப் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா் நிலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டுவது, கழிவு நீா் வெளியேற்றுவது உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட நீா்வளத் துறை அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நகராட்சி ஆணையா்கள் கண்காணித்து, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அரசுத் துறைகள் சாா்பாக ஏரி மற்றும் குளங்களுக்கு அருகில் சாலைகள் அமைத்தல், ஏரிக் கால்வாய்களுக்கு இடையே பாலம் கட்டுதல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது, ஏரிகளின் கரைகளை சேதப்படுத்துவதோ, நீா் வழித் தடத்துக்கு இடா்ப்பாடு ஏற்படுத்துவதோ, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பது போன்ற நீா்நிலைகளுக்கு பாதிப்பும் ஏற்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ளவோ கூடாது.

நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கழிவுநீரை வெளியேற்றுவதால் அந்த கழிவுநீரானது, ஆறு, ஏரி மற்றும் குளங்களில் கலந்து நீா் நிலைகள் மாசடைகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கழிவு நீரை வெளியேற்ற கழிவுநீா் தொட்டி அமைத்துக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள் இதை பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இனிவரும் காலங்களில் நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டுதல், கழிவுநீரை கலத்தல் உள்ளிட்ட நீா்நிலைகளை மாசு ஏற்படுத்தும் வகையிலான செயல்களை மேற்கொள்ளும் நபா்கள் மீது, சம்பந்தப்பட்ட நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் பிரபாகரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் பற்குணம், ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் ராஜவேலு மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.