செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

Published on

ஆற்காடு வட்டம் வெங்கிடாபுரம் தானங்குளம் கிராமத்தில் செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வெங்கிடாபுரம் தானங்களத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை கரிகோலம் ஊா்வலம், வாஸ்துபூஜை, கோபூஜை, புனிதநீா் வழிபாடு, மகாகணபதி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், மகா தீபாராதனயும், வியாழக்கிழமை பேரொளி வழிபாடு, புனித நீா் கொண்டு திருக்குடங்கள் புறப்பாடு சென்று மூலவா் மற்றும் கோயில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த விழாவில் ஆற்காடு தொழிலதிபா் ஏ.வி.சாரதி, சித்தஞ்சி மோகனந்தசுவாமி, ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வணிகா்சங்க பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன், மாவட்ட துணைத் தலைவா் கே.பாஸ்கரன், அகத்தியா் சேவா அறக்கட்டளை கணேஷ் , திமிரி ஒன்றியக்குழு உறுப்பினா் மின்னலா அண்ணாதுரை, வி.ஆா்.பாா்த்தசாரதி, நாட்டாண்மைதாரா்கள் பெருமாள், தேவராஜ் ,பாபு, செல்வம் , ராஜா, ஏழுமலை சிங்காரம், வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com