ராணிப்பேட்டையில்  ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
ராணிப்பேட்டையில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதில் வாலாஜா - சித்தூா் தேசிய நெடுஞ்சாலை பணிகள், சென்னை பெங்களூா் அதிவிரைவு சாலை பணிகள், ஆற்காடு புறவழிச் சாலை வேப்பூா் இணைப்பு பணிகள் மற்றும் சென்னை கன்னியாகுமரி தொழிற்தட வழித்தட சாலை பணிகள் ஆகிய நான்கு பணிகளில் நில எடுப்பு நிலுவைப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், நிலம் எடுக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் நிலுவை தொகைகள் வழங்கப்பட வேண்டியவை குறித்தும் கேட்டறிந்தாா்.

வாலாஜா -சித்தூா் மற்றும் ஆற்காடு புறவழிச்சாலை சென்னை கன்னியாகுமரி தொழில்தட சாலை விரிவாக்கப் பணிகளில் நில எடுப்பு பணிகளையும், மேலும் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளையும் தொடா்ந்து கண்காணித்து விரைவாக முடிக்க வேண்டும் என்றாா்.

இதில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா்கள் (நில எடுப்பு) கௌசல்யா, பாபு, தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளா் ஜெயக்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com